ராமநாதபுரம்: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் பகுதியைச்சேர்ந்த பக்தர்கள் குழுவாக பாதயாத்திரை செல்கின்றனர். உச்சிபுளி அருகே வேதாளை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பழநி முருகனுக்கு மாலை அணிந்து நேற்று பாதயாத்திரையாக பழநிக்கு புறப்பட்டனர். பிள்ளையார்பட்டியில் தங்கி சுவாமி த ரிசனம் முடித்து அங்கிருந்து திண்டுக்கல் வழியாக பழநிக்கு ஜன.,27, 28ல் செல்ல உள்ளதாக பக்தர்கள் கூறினர்.