திருக்கனுார்; வாதானுார் வேணுகோபால சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வரும் 23ம் தேதி நடக்கிறது.திருக்கனுார் அடுத்த வாதானுார் கிராமத்தில் பாமா- ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 7ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம், 23ம் தேதி நடக்கிறது.அன்று காலை 10:00 மணிக்கு ராமானுஜர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு வேணுகோபால சுவாமி- பாமா ருக்மணி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 10:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.