விருதுநகர்: விருதுநகர் - சிவகாசி மெயின்ரோடு மீசலுார் விலக்கில் எழில் கொஞ்சும் அழகுடன் ஸ்ரீஷீரடி சாய்பாபா மந்திர் கோயில் அமைந்துள்ளது. தன்னை நாடி வருவோருக்கு கேட்ட வரம் தருவார் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா என பக்தர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.ஸ்ரீஷீரடி சாய்பாபா மந்திர் கோயில் மூலவரான ஸ்ரீஷீரடி சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருணையே வடிவமாக பாபா வீற்றிருக்கும் அழகை காண கண்கோடி வேண்டும்.அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பஜன், பாமாலை, வழிபாடு, பக்தி சொற்பொழிவு என தினமும் கோயில் விழாக்கோலம் பூண்டு வருகிறது. பக்தர்கள் தரும் பூஜை பொருட்களை கோயில் நிர்வாகம் ஏற்று கொள்கிறது. மஹாராஷ்டிராவில் உள்ள பூர்வீக ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலுக்கு 60 வயதுக்கு உட்பட்ட பக்தர்களை ஸ்ரீஷீரடி சாய்பாபா மந்திர் நிர்வாகம் சார்பில் அழைத்து செல்கிறது. கட்டணம் உண்டு. இதில் பங்கேற்க விரும்புவோர் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.ஸ்ரீஷீரடி சாய் பாபா மந்திர் கோயிலில் ஆண்டு தோறும் டிசம்பரில் நடக்கும் சத்ய நாராயணா விரத பூஜை சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் பால்குடம் வெகு சிறப்பாக நடக்கும். சிறுமிகள் தீபம் ஏந்தி பக்தர்களை வரவேற்பர். இக்கோயில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மிஷன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. பூஜை விவரங்களுக்கு 97877 84828.