காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே ஜெயங்கொண்டான் ரத்தினவேல் நாட்டார்கள் தைப்பூசத்தை முன்னிட்டு குன்றக்குடியில் இருந்து 101 காவடிகள் ஏந்தி பழநிக்கு பாதயாத்திரை துவக்கினர்.
ஆண்டுதோறும் பழநிக்கு காவடி யாத்திரை செல்லும் இவர்கள் ஜெயங்கொண்டானில் இருந்து நேற்று முன்தினம் குன்றக்குடி வந்தனர்.குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தவர்கள் 101 காவடிகள் ஏந்தி நேற்று மதியம் பழநிக்கு பாதயாத்திரை துவக்கினர். தேவகோட்டை:அழகாபுரி தெரு தண்டாயுதபாணி கோயிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். வழக்கமான நடைமுறையின்றி இந்நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்ற பக்தர் மட்டும் காவடி ஏந்தி புறப்பட்டார்.