பதிவு செய்த நாள்
22
ஜன
2021
05:01
ஈரோடு: ஈரோடு, கொங்காலம்மன் கோவில், தைப்பூசத் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, காவிரி சென்று பூசாரிகள் மட்டும் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், கொடியேற்றமும் நடந்தது. அதில் மூலவர் எதிரில் உள்ள, கொடிமரத்தில் கோவில் பூசாரிகள் திருவிழா கொடியேற்றினர். தொடர்ந்து, மாலையில் அம்மன் உள் பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வரும், 26ல் பொங்கல் வைக்கும் வைபவம், மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. 28ல் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி காலை, 8:30 மணிக்கு நடக்கிறது. 29ல் விடையாற்றி உற்சவம், 108 சங்காபி?ஷகம், தெற்போற்சவமும் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.