சிங்கம்புணரி : தைப்பூச விழாவை யொட்டி 400 ஆண்டுகளுக்கும் மேலாக காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார், புதுவயல், பள்ளத்துாரை சேர்ந்த செட்டிநாடு நகரத்தார் பழநி தைப்பூச விழாவுக்கு காவடி எடுத்துவருகின்றனர். வழக்கமாக 400க்கும் மேற்பட்ட காவடிகள் செல்லும் நிலையில் இந்தாண்டு கொரோனோ பாதிப்பு காரணமாக அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து மூன்று காவடிகளை மட்டும் எடுத்துச் செல்கின்றனர்.நேற்று சிங்கம்புணரி வந்த காவடிகளுக்கும் வைர வேலுக்கும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.