பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் கட்டுமான பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2021 07:01
ரிஷிவந்தியம்: ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பாசார் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் கட்டுமான பணிகள் தொடங்கியது.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.பிரம்மாவும், விஷ்ணுவும் வழிபட்ட ஸ்தலமாககூறப்படும் இக்கோவிலை சுற்றி பாறைகளில் கல்வெட்டுகள் உள்ளன.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல் மாசி மாதம் வரை கோவில் மூலவரான பிரம்மபுரீஸ்வரர் மீது, சூரியஒளி படுகிறது.சிதிலமடைந்த இக்கோவிலை உலகளாவிய ஆன்மிக சங்க நிறுவனர் ஆருர் நடராஜன் சுவாமிகள் தலைமையிலான குழுவினர் புதுப்பிக்க துவங்கினர்.முதற்கட்டமாக கோவிலுக்கு அருகே இளையான்தன்குடி மாறநாயனார் திருமடம் கட்டுமான பணி கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் சன்னதியினை சுற்றி இருந்த கட்டடத்தின் உயரம், அகலம் அளவீடு செய்யப்பட்டு, கருங்கற்கள் அகற்றப்பட்டது. உடைந்து போன கற்களுக்கு பதிலாக, அதே அளவில் புதிய கற்கள் செதுக்கி வைத்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது.மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதியில் 5 படிநிலைகளுடன் கொண்ட கோபுரம், மரகதாம்பிகை சன்னதியில் 3 படிநிலைகளுடன் கொண்ட கோபுரம், கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் உள்ளிட்டவை கட்டப்படுகிறது.