திருமங்கலம் : திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குலதெய்வமான முனியாண்டி சுவாமி கோயில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை நடக்கும். பக்தர்கள் ஒருவாரம்காப்புகட்டி விரதம்இருந்தனர். நேற்று காலை பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 350க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு பிரியாணி தயார் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.