பதிவு செய்த நாள்
28
ஜன
2021
12:01
கோபி: கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலை, 10:00 மணிக்கு, விநாயகர் பூஜை மற்றும் யாகசாலை பூஜை முடிந்து, கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. நாளை காலை, 9:00 மணிக்கு, மூலவருக்கு திருக்கல்யாண உற்சவம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 29ல், காலை, 9:00 மணிக்கு, சண்முகருக்கு அபி?ஷகம், சிகப்பு சாற்றி அலங்காரம் சண்முகார்ச்சனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.