பதிவு செய்த நாள்
28
ஜன
2021
12:01
திருக்கனுார் : விநாயகம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த விநாயகம்பட்டு கிராமத்தில் ஆதி சுந்தரமூர்த்தி விநாயகர், பொற்கிலை பூரணி சமேத ஐயனாரப்பன், திரவுபதியம்மன், மயான அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 25ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி, லட்சுமி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 7 மணிக்கு 2ம் காலயாக சாலை பூஜை, 9 மணிக்கு புதிய விக்ரகங்கள் கரிகோலம் வருதல், தேவதா பிரஷ்டை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை ஆரம்பமாகி பல்வேறு ஹோமங்கள் நடந்தன. இன்று 27 ம் தேதி கோ பூஜை, 4ம் காலயாக சாலை பூஜை, காலை 9 மணி முதல் ஆதி சுந்தரமூர்த்தி விநாயகர், பொற்கலை பூரணி சமேத ஐயனாரப்பன், திரவுபதியம்மன், மயான அங்காள பரமேஸ்வரி, முத்து மாரியம்மன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதேபோல், கூனிச்சம்பட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்த 13 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் இன்று (27ம் தேதி) நடக்கிறது.