உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் மற்றும்நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.* மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவில் மூலவருக்கும், நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.*கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலையில் வீதியுலா புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை மாதாதந்திர பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் வல்லபேஸ்வரர்சமேத வல்லபேஸ்வரி சன்னதியில் பிரதோஷ விழா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை யினர் செய்திருந்தனர்.* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வன்மீகநாதர், நம்புதாளை நம்புஈஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது.நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான சிறப்பு அபிேஷகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.