திருக்கனுார்; கூனிச்சம்பட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட 13 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஒரே கல்லினால் ஆன 6 டன் எடையுள்ள 13 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கடந்த 12ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதன் கும்பாபிஷேக விழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. 9:45 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.