பதிவு செய்த நாள்
30
ஜன
2021
10:01
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படுகிறது. இக்கோவிலில், 10 நாள் தைப்பூச திருவிழா, கடந்த, 22ம் தேதி நடந்தது. முக்கிய நிகழ்வான, தைப்பூச திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவின் எட்டாம் நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். யாகசாலை பூஜை, அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, ஆடுமயில் வாகனத்தில், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்தார். மாலை, 5:30 மணிக்கு, பொன்னூஞ்சல் நிகழ்ச்சியும், 7:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, வேடர்பறிலீலை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து, தெப்பத்திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.