திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் வனரேணுகாம்பாள் (எ) முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சனை விழா நடந்தது.அதனையோட்டி அம்மனுக்கு நேற்று காலை கோமாதா பூஜை மற்றும் சந்தன அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9.30 மணிக்கு முதல் கால பூஜை, 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4.30 மணியளவில் நான்காம் கால பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு கால பூஜையின்போதும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஓதப்பட்டது. விழாவில் பக்தர்கள் சுவாமிக்கு சிவப்பு அபிேஷகம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஏகதின லட்சார்ச்சனைக் குழு ஆசிரியர் பாபு செய்திருந்தார்.