விருத்தாசலம் : விருத்தாசலம் செல்லியம்மன் கோவிலுக்கு விமான அலகு அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தையொட்டி, மணிமுக்தாற்றங்கரை செல்லியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.நேற்று, தேரோட்டத்தையொட்டி காலை, அலங்கரிக்கப்பட்ட தேரில், செல்லியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். மதியம் 12:00 மணியளவில், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், செடல், விமான அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.