பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2021 02:02
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி தினமும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, ஒளிபிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை வகித்தார். பழநிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒளிபிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும், பேண்டு போன்ற ஒளிபிரதிபலிப்பான் கைகளில் கட்டப்பட்டது. பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ரோட்டோரமாக செல்ல வேண்டும்; பாதுகாப்பாகவும், கவனமுடன் செல்ல வேண்டும். இரவு நேர பயணத்தை தவிர்த்து, பாதுகாப்பான இடத்தில் தங்கி ஓய்வெடுத்து செல்ல வேண்டும், என, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.