திருப்பூர் : காங்கயம், சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கடந்த, 28ம் தேதி தேரோட்டம் நடந்தது.நேற்று, கோவில் அடிவாரத்தில் உள்ள நந்தவன தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்போற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளியும், தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.