பரமக்குடி: பரமக்குடி நகராட்சி அலுவலகம் அருகில் குமரன் படித்துறையில் 1897 பிப்., 1 அன்று சுவாமி விவேகானந்தர் வருகை புரிந்தார். இதன்படி அமெரிக்கா சிகாகோ மாநாட்டில் ஆன்மீக எழுச்சி உரை ஆற்றியபின் ராமநாதபுரம் வழியாக பரமக்குடி வந்து உரையாற்றியுள்ளார். இதனை நினைவு கூறும் வகையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா மற்றும் வருகை நாள் விழா நடந்தது. ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் ஸ்ரீமத் சுவாமி சுதபானந்தஜி மஹராஜ் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் ஆடல்அரசன் முன்னிலை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ண ஞான வழிபாடு மன்ற நிர்வாகி முருகன் வரவேற்றார். நூலாசிரியர் பெருமாள் பேசினார். சவுராஷ்டிர பள்ளி ஆசிரியர் பிரகாஷ், ராமகிருஷ்ண சேவா மந்திர் நிர்வாகி சிவராம், சுரேஷ் கண்ணன் வாழ்த்தினர். ஞான வழிபாடு மன்ற நிர்வாகி கோபால் நன்றி கூறினார்.