நத்தம் : நத்தம் அருகே இடையபட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.முதல் நாள் விளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கணபதி ேஹாமம், அனுக்ஞை, வேதபாராயணம் உள்ளிட்ட முதல் கால யாக பூஜை நடந்தது. மறுநாள் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து நிறையாகுதி, திருநீற்றுப் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. யாக சாலையில் வைத்திருந்த புனித நீர் அழைத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.பின்னர் 16 வகை அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.