பதிவு செய்த நாள்
03
பிப்
2021
02:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 10 மாதங்களுக்கு பின், பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 23.42 லட்சம் ரூபாய் கிடைத்தது.
காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, வெளி மாநிலத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்கு வருவர். அவர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும்.கொரோனா காலத்தில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால், கூட்டம் குறைந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின், பக்தர்கள் வர துவங்கினர்.இந்நிலையில், 10 மாதங்களுக்கு பின், அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜெயா முன்னிலையில், ஏகாம்பரநாதர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள், காணிக்கையை எண்ணினர். இதில், 23.42 லட்சம் ரூபாய், 50 கிராம் தங்கம், 500 கிராம் வெள்ளி, கோவிலுக்கு வருவாயாக கிடைத்தன.