பதிவு செய்த நாள்
03
பிப்
2021
02:02
விழுப்புரம் : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நிதியளிப்பு துவக்க விழா மற்றும் அலுவலகம் திறப்பு விழா விழுப்புரத்தில் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ேஷத்திரம் டிரஸ்ட் சார்பில் நடந்த, நிகழ்ச்சிக்கு, திருக்கோவிலுார் ஜீயர் சீனிவாச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கினார். பின், தனது மடத்தின் மூலம் நிதி வழங்கி துவக்கி வைத்தார். அந்த நிதியை, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை தலைவர் ராஜா பெற்றுக்கொண்டு, சிறப்புரையாற்றினார். அப்போது, ரவிகிருஷ்ணன், வைணவ சபை பொறுப்பாளர் குமார், பா.ஜ., மாவட்ட மகளிரணி தலைவி சரண்யா, குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட துணை செயலாளர் மதுதண்டபாணி செய்திருந்தனர். முன்னதாக, விழுப்புரம் அனுமார் கோவில் தெருவில், அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி திரட்டும் அலுவலகம் திறக்கப்பட்டது.