பதிவு செய்த நாள்
04
பிப்
2021
06:02
புதுச்சேரி; கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவையொட்டி, சுற்றுவட்டாரத்தில் உள்ள 23 பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பெனோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நாளை நடக்கிறது. இதையொட்டி, கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளி, முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் மேல்நிலைப் பள்ளி, இந்திரா நகர் இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளி, தருமாபுரி, காந்தி நகர், தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிகள், முத்திரையார்பாளையம் ஆயியம்மாள் அரசு நடுநிலைப் பள்ளி, திலாஸ்பேட்டை பெண்கள் மற்றும் ஆண்கள் நடுநிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம், காந்தி நகர், இந்திரா நகர், குண்டுபாளையம், சொக்கநாதன்பேட், மீனாட்சிபேட், தருமாபுரி, சாணரப்பேட், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், முத்திரையார்பாளையம், அய்யங்குட்டிப்பாளையம் அரசு தொடக்க பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளிக்கு, 5, 6ம் தேதி என இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறையை ஈடு செய்யும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.