பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஜோதிநகர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடமனர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.