பதிவு செய்த நாள்
05
பிப்
2021
01:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி, வரும், 27ம் தேதி நடக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுசிறப்பாக நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், குண்டம் திருவிழாவில் பங்கேற்பார்கள். இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால், திருவிழா நடக்குமா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.வரும், 11ம் தேதி, தை அமாவாசையன்று, நோன்பு சாட்டுதலுடன் திருவிழா துவங்குகிறது. வரும், 24ம் தேதி நள்ளிரவு மயான பூஜை நடக்கிறது. 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல், 27ம் தேதி காலை, 6:30 மணிக்கு, திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.இத்தகவலை, மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி தெரிவித்தார்.