பதிவு செய்த நாள்
10
பிப்
2021
04:02
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு, பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு, நேற்று மாலை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து, சிவபெருமான் ரிஷப வாகனத்தில், உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.பூங்கா நகர், சிவ -- விஷ்ணு கோவிலில் எழுந்தருளி உள்ள புஷ்பவனேஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில், பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.