வீரபாண்டி திருவிழா ராட்டினம்; ஏலம் பிப். 24 க்கு ஒத்திவைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2021 04:02
தேனி : வீரபாண்டி சித்திரை திருவிழா ராட்டினம் ஏலத்தில் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு கோரியதால் பிப். 24க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் மே யில் சித்திரை திருவிழா ஒருவாரம் நடைபெறும். தேனி மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். 2020 ல் கொரோனாவால் கடைசி நேரத்தில் திருவிழா ரத்தானது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடக்க உள்ளது. இதில் பொழுது போக்கு ராட்டினங்கள், கடைகள் நடத்த பிப். 5ல் ஏலம் நடந்தது. மதுரை, தேனியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டுகளில் ராட்டினம் ரூ.1.07 கோடிக்கும், கடைகள் ரூ.25 லட்சத்திற்கும் ஏலம் போனது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தலுடன் திருவிழா நடப்பதால் விழா களை கட்டும். அதிக தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்த்தனர். ஏலதாரர்கள் சிண்டிகேட் அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் கோரினர். இதையடுத்து ஏலத்தை அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி பிப். 24க்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.