சேதுக்கரையில் பக்தர்கள் புனித நீராட ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2021 07:02
திருப்புல்லாணி: தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரை சேதுபந்தனம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கில் வருகின்றனர். அதிகாலை நாலு மணி முதல் பிற்பகல் வரை முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றி புனித நீராடி விட்டு செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக திருப்புல்லாணி ஊராட்சி, சேதுக்கரை ஊராட்சி ஆகியவற்றின் சார்பில் குடிநீர், மருத்துவ முகாம்கள், மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தயாரான நிலையில் வைத்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.