திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவங்கியது. ஆண்டுதோறும் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது.
நேற்று மாலை 6:00 மணிக்கு பூத்தமலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (பிப்.12) காலை 10:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேரில் வீதியுலாவும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு புஷ்ப அலங்காரம், நாளை மறுநாள் (பிப்.14) இரவு 8:00 மணிக்கு சாட்டுதல், பிப்.16 மதியம் 12:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.