சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது. நாளை முதல் ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறும்.மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.
பின்னர் ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கும். கணபதிேஹாமம், உஷபூஜை, களபாபிேஷகம், உச்சபூஜை, தீபாராதனை, அத்தாழபூஜை தினமும் நடைபெறும். அனைத்து நாட்களிலும் காலை 5:00 மணிக்கு நடை திறந்து, பகல் ஒரு மணிக்கு அடைத்து, மாலை 5:00 மணிக்கு நடை திறந்து 9:00 மணிக்கு அடைக்கப்படும். ஐந்து நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். மண்டல - மகரவிளக்கு காலம் போல் தினமும் ஐந்தாயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இவர்கள் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா டெஸ்ட் நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும். பிப்.17 இரவு நடை அடைக்கப்படும்.