வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி தரிசனம் செய்தனர்.
இங்கு பிப்.9 முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவியத் துவங்கினர். காலை 6:00 மணி முதல் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேறினர். நேரம் செல்லச்செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாலை 4:00 மணி வரை ஏராளமான பக்தர்கள் மலையேறினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம் சுவாமிகளுக்கு 18 வகை அபிேஷகங்களுடன் அமாவாசை வழிபாடு நடந்தது. மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது.