அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில், மூலிகை சூரணம் வழங்குதலும், சிறப்பு வழிபாடும் நடந்தது. அன்னூர், ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு மாதமும், அமாவாசை நாளன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது. நேற்று அமாவாசையை முன்னிட்டு. மாலையில், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதை தொடர்ந்து, பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சூரணம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு அமாவாசையன்றும், ஐயப்பன் கோவிலில் மூலிகை சூரணம் வழங்கப்படுகிறது. இந்த சூரணத்தை உட்கொண்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.