பதிவு செய்த நாள்
02
ஜூன்
2012
04:06
அம்பாளை உபாசிப்பது தான் ஜன்மம் எடுத்ததன் பலன். அன்பு மயமான அம்பிகையை தியானிப்பதை விட பேரானந்தம் வேறில்லை. அம்மா! நான் எத்தனையோ தோஷம் உள்ளவன் என்றாலும் உன்னை நம்பி விட்டேன். நான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க நீயே அருள் பண்ணம்மா!, என்று அவளிடம் ஒப்புக் கொடுத்தாலே போதும். இதை விட பெரிய சித்தாந்தமோ, அனுஷ்டானமோ வேறு தேவையில்லை.
ஆச்சாரியாள், அம்பாள் உபாசித்ததன் பலன் இன்னின்ன என்று ஸெளந்தர்ய லஹரியில் சொல்கிறபோது முதலில் படிப்பு, செல்வம், அழகு, தீர்க்காயுள் முதலியன கிடைக்கும் என்கிறார். கல்வியின் பயனாக நல்லகுணம் கிடைக்கும். பிறகு நிறைய சம்பத் கிடைக்கும். பொதுவாக யாரும் பணத்தை விரும்புகிற மாதிரி குணத்தை விரும்பிப் பிரார்த்திப்பதில்லை. ஆனால், குணம் இல்லாத இடத்தில் பணம் இருந்து என்ன பிரயோஜனம்? இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? என்று தோன்றலாம். ஆனால், இதற்கு மேல் தான் அம்பாளின் பரமானுக்ரஹத்தை தேடச் செய்யும் ஞானம் பிறக்கும். புத்தி, பணம், அழகு, ஆயுள் ஆகிய சிற்றின்ப கட்டுக்களே வேண்டாம் என்ற வைராக்கியம் உண்டாகும். அப்போது பக்தனை முடிந்த முடிவாக அம்பாள் பரமானந்தத்தில் திளைக்கச் செய்கிறாள்.
-மகா பெரியவர்