பதிவு செய்த நாள்
16
பிப்
2021
03:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் தொண்டை மண்டல மடத்தின், 233வது ஆதீனம், குரு மகாசன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார், நேற்று பொறுப்பேற்றார்.
பழமையான மடங்களில் ஒன்று, காஞ்சிபுரம் தொண்டை மண்டலம். இதன், 232வது ஆதீனமாக, குருமகா சன்னிதானமாக இருந்த ஞானப்பிரகாச பரமாச்சாரியார், 87, கடந்த ஆண்டு, டிசம்பர் 2ம் தேதி காலமானார்.தொடர்ந்து, மடத்தின் நிர்வாகக் குழு, புதிய ஆதீனத்தை தேர்ந்தெடுக்க, 13 பேரிடம் விண்ணப்பம் பெற்றது.முன்னாள் நீதிபதி பாஸ்கரன் மற்றும் சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ்., மற்றும் மடத்தின் ஆலோசனைக் குழு தலைவர் விஜயராகவன் ஆகியோர் கலந்தாலோசித்து, ஜி.நடராஜன், 76, என்பவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.இவர், தருமபுரம் ஆதீனம்ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், காஞ்சிபுரம் தொண்டை மண்டல, 233வது ஆதீனம், குரு மகாசன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சார்ய சுவாமிகளாக, நேற்று பொறுப்பேற்றார்.இவர், திருவாரூர் அடுத்த, வடகண்டம் கிராமத்தில் பிறந்து, அரசு பொறியாளராக இருந்து, 2000ல் விருப்ப ஓய்வு பெற்றவர்.