கோபி: கோபி அருகே மூலவாய்க்காலில், கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. முன்னதாக கடந்த, 6ல், விழா துவங்கியது. நேற்று அதிகாலை திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு, கலசத்துக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. அளுக்குளி, செங்கலரை, மூலவாய்க்கால், கரட்டடிபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.