பதிவு செய்த நாள்
16
பிப்
2021
06:02
அன்னூர்: அயோத்தி ராமர் கோவிலுக்கு நிதி வசூலிப்பில், கரியாம்பாளையம் ஊராட்சி அசத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ர அறக்கட்டளை சார்பில் நிதி வசூலிக்கப்படுகிறது. இதற்காக, அன்னூர் ஒன்றியத்தில், 21 ஊராட்சி மற்றும் ஒரு பேரூராட்சியில், 22 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அன்னூர் ஒன்றியத்துக்கு, 20 லட்ச ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரியாம்பாளையம் ஊராட்சிக்கு, 38 ஆயிரத்து 500 ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இரண்டே நாளில் கரியாம்பாளையம் ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் நிர்ணயிக்கப்பட்ட 38 ஆயிரத்து 500 ரூபாயை வசூலித்து அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தினார். மேலும், 45 ஆயிரம் ரூபாய், நான்கு நாட்களில் அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் செலுத்தினார். இதையடுத்து நிதிக் குழு சார்பில் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜ், ராஜேந்திரன் ஆகியோர் புஸ்பராஜை கவுரவித்து பேசுகையில், தமிழகத்தில், வரும், 28 ம் தேதி வரை நிதி வசூல் நடைபெறும். இதில் கரியாம்பாளையம் ஊராட்சி, இரண்டே நாளில் இலக்கை எட்டிய முதல் ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.