கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2021 11:02
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
திருவிழா பிப்.11 ல் பூத்தமலர் பூ அலங்காரத்துடன் துவங்கியது. பிப்.12 ல் பூச்சொரிதல், பிப்.14 ல் சாட்டுதல் விழா நடந்தது. நேற்று கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதன் பின் அம்மன் உருவம் பொறித்த கொடியை கோயிலின் நான்கு ரதவீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். கொடிக்கு சிறப்பு பூஜை செய்து பூஜாரி ஏற்றினார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் வீதியுலா நடந்தது. பிப்.20 ல் அம்மன் நாகல் நகர் புறப்பாடு நடக்கிறது. பிப்.26 காலை 6:00 மணிக்கு பூக்குழி, மாலை 5:00 மணிக்கு தேர் வீதியுலா நடக்கிறது. பிப்.27 இரவு 7:00 மணிக்கு தசாவதாரம் நிகழ்வு நடக்கிறது. மார்ச் 2 ல் தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.