பதிவு செய்த நாள்
17
பிப்
2021
11:02
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் தேர்த்திருவிழா, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியோடு நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்வான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, மார்ச் 3ம் தேதி மதியம் 2:00 மணிக்கு நடக்கிறது.
முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து நவதானியங்கள் மஞ்சள் துணியில் இட்டு, மங்கல திரவியங்களால் பூஜித்து, மங்கலநாணில் ஏற்றப்பட்டது.மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலை சுற்றி சிவாச்சாரியார்கள், வேதபண்டிதர்கள் பாராயணம் செய்ய, கோவிலிலிருந்து தேர்நிலைத்திடல் நோக்கி, மங்கல நான் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.ராஜவீதி தேர்நிலைத்திடலில், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் சமர்ப்பித்து தேரின் நான்கு கால்களுக்கும், எலுமிச்சம் பழங்கள் சமர்ப்பித்து பூஜை செய்யப்பட்டது. அதன் பின் தேரின் மீது, மங்கல நான் பொருத்தி, சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.