பதிவு செய்த நாள்
17
பிப்
2021
11:02
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் 11 மாதங்களுக்கு பின் தை கார்த்திகையன்று (பிப்.19) சுப்பிரமணியசுவாமி, தெய்வானை தங்க மயில் வாகனத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கொரோனா தடை உத்தரவால் கடந்த மார்ச் 20 முதல் கோயிலுக்குள் பக்தர்களின்றி கால பூஜைகள் மட்டும் நடந்தது. செப்.,1 முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பங்குனி திருவிழா, வைகாசி விசாகம், ஊஞ்சல் திருவிழா, நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், எண்ணெய்காப்பு திருவிழா, மாத கார்த்திகை தெப்பத்திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன. சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனை, பாலாபிஷேகம், உபய திருக்கல்யாணம், சண்முகார்ச்சனை, தங்கரதம் புறப்பாடு துவங்கியது. பிப்., 19 அன்று ரத வீதிகளில் சுவாமி உலா நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளதாக கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.