மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச்சில், கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா துவங்கியது. மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோட்டில் புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. இதன் தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக பங்கு பாதிரியார் பால் சகாயராஜ் தலைமையில் கூட்டு பாடற் திருப்பலி நடந்தது. பாதிரியார் மரிய இருதயநாதன் கொடியேற்றினார். விழாவில் பங்கு மக்கள் பங்கேற்றனர். 7 லிருந்து 9ம் தேதி முடிய மாலை 6.00 மணிக்கு, பாதிரியார் மேத்யூ தலைமையில், திருப்பலி, மறையுரை, நவநாள் மற்றும் வேண்டுதல் தேர் நடைபெற உள்ளன. வரும் 10ம் தேதி காலை 8.00 மணிக்கு கோவை ஆயருக்கு வரவேற்பு கொடுப்பது. தொடர்ந்து 8.15 மணிக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் கூட்டுப்பாடற் திருப்பலி, சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை, உறுதிபூசுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை 5.30 மணிக்கு பங்கு பாதிரியார் பால் சகாயராஜ் தலைமையில் திருவிழா பாடற்பலியும், தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு அலங்கார புனித அந்தோணியார் தேர் பவனியும் நடைபெற உள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் சென்று தேர் சர்ச் நிலையை அடைந்ததும், திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கப்படுகிறது.