பதிவு செய்த நாள்
19
பிப்
2021
09:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலில், நடப்பாண்டின், மாசி மாத பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் இரவு, விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது.நேற்று காலை, 8:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், இந்திர வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்தார்.காலை, 9:30 மணிக்கு, உற்சவர் கொடி மரத்தின் எதிரே வந்தார். அதைத்தொடர்ந்து, கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. வரும், 24ம் தேதி, மரத்தேர் திருவிழா, 25ம் தேதி, வள்ளி திருமணம் நடக்கிறது. இம்மாதம், 27ம் தேதி, கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.