நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள் நீர், புஷ்பம், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தற்போது மலைக்கிணறு ஊற்றில் தீர்த்தம் வரத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சுவாமி சன்னதியிலும் பூஜை நடந்தது.