வத்திராயிருப்பில் காசிவிஸ்வநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2012 11:06
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பில் காசிவிஸ்வநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலையில் சுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் 18 வகையான அபிஷேகங்களும், குமாரஸ்தவ பாராயணம், சஷ்டிப்பாராயணம், லட்சார்ச்சனை நடந்தது. மாலையில் சுவாமி சேவற்கொடியுடன் மயில்வாகனத்தில் எழுந்தருளினார். அவரைத்தொடர்ந்து வள்ளி தெய்வானையும் எழுந்தருளினர். சரணம் பாராயணத்திற்குப்பின் வீதியுலா நடந்தது. மீண்டும் கோயிலை வந்தடைந்த சுவாமிக்கு எதிர்சேவையும், மங்களபூஜையும் நடந்தது. பக்தசபா நிர்வாகிகள், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன் ஏற்பாடு செய்தனர்.