காரைக்கால் : காரைக்காலில் நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கி, வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 16ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று முன் தினம் பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதியுலா நடந்தது. வரும் 24ம் தேதி தேர் திருவிழா, 27ம் தேதி மாசிமகம் தீர்த்தவாரி, மார்ச் 1ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.