பதிவு செய்த நாள்
22
பிப்
2021
05:02
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் தாம்பராஸ் கிளை சார்பில் சீனிவாச பெருமாள் ஆராதனை விழா நடந்தது. விநாயகர் பூஜை, புண்யாக வாசனத்தை தொடர்ந்து சீனிவாச பெருமாள், லட்சுமி, லலிதா மற்றும் ஆஞ்சநேயருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, வேத பாராயணம் நடந்தது. கொரோனா உலகை விட்டு வெளியேற பிரார்த்தனை செய்யப்பட்டது. கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் ஜெகநாதன், முன்னாள் தலைவர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் பிச்சுமணி, மகளிர் அணி செயலாளர் ராஜம் மீனாட்சி, மாநில துணை பொது செயலாளர் இல.அமுதன், ஆடிட்டர் கோதண்டராமன், நிர்வாகி சுந்தரராஜன் பங்கேற்றனர்.