மேட்டுப்பாளையம்: காரமடை ரங்கநாதசுவாமி கோயில் மாசிமக திருத்தேர் பெருவிழா தொடங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் அன்னப்பட்சி வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 26ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. 27ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருள்கிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.