திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பகுளத்தில் மகா தீப ஆரத்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2021 12:02
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கரதீர்த்த தெப்பகுளத்தில் நேற்று திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் இரண்டாம் ஆண்டு மகாதீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் கோயிலின்ல் நான்கு ரத வீதிகளிலும் ராமநாம ஜெபத்துடன் வீதியுலாவும், மாலை 6 மணி அளவில் சக்கரதீர்த்த தெப்பகுளத்தில் பால், பன்னீர், இளநீர், வஸ்த்திரம், திரவியப்பொடிகளால் பூஜை செய்யப்பட்டது. தூப, தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு ஐந்து வகையான ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் கொரோனா நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணி அளவில் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தர்ம ரக்க்ஷன சமிதி, ஆன்மீக அமைப்புகள் மற்றும் சமூக நல தொண்டு நிறுவனங்கள் சார்பில் செய்துள்ளனர்.