ஆத்தூர்: ஆத்தூர், திருவிழி அம்மன் கோவிலில், நேற்று கும்பாபி?ஷக விழா நடந்தது. ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவில் திருவிழி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் கும்பாபி ?ஷக விழா நடந்தது. 7:00 மணியளவில் கைலாசநாதர் கோவில் சோமசுந்தரகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள், கோவில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபி ?ஷகம் செய்து வைத்தனர். இதையொட்டி, மூலவர் திருவிழி அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.