பதிவு செய்த நாள்
23
பிப்
2021
04:02
பனமரத்துப்பட்டி: துர்க்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், முதன்முறையாக தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சியிலுள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 10 ஏக்கர் நிலம் உள்ளது. கோவிலுக்கு வருவாய் ஏற்படுத்த, பொது ஏலம் நடத்தி, நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட வேண்டும் என, ஊர் மக்கள் வலியுறுத்தினர். நேற்று, முதன் முறையாக கோவில் வளாகத்தில், அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் குமரவேல், ஆய்வாளர் மணிமாலா முன்னிலையில் ஏலம் நடந்தது. முன்வைப்பு தொகை செலுத்தி, 30 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். 10 ஏக்கர் நிலத்தை, ஓராண்டிற்கு பயிர் சாகுபடி செய்வதற்கு, இரண்டு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு தனியாருக்கு, குத்தகைக்கு விடப்பட்டது. செயல் அலுவலர் சங்கர், வி.ஏ.ஓ., ஜெயபால், கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் பங்கேற்றனர்.