பதிவு செய்த நாள்
24
பிப்
2021
12:02
குரோம்பேட்டை : அஸ்தினாபுரத்தில் உள்ள, ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம் இன்று, விமரிசையாக நடைபெற உள்ளது.
குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகர், எட்டாவது தெருவில், ஸ்ரீ தேவி பொன்னியம்மன் கோவில் உள்ளது. சகல வேண்டுதல்களும் நிறைவேறும் இக்கோவில், 500 ஆண்டுகளுக்கும் மேல், பழமை வாய்ந்தது.கடைசியாக, 2004ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவிலை புனரமைக்கும் பணிகள் துவங்கின. சமீபத்தில், இப்பணிகள் முடிந்த நிலையில், இம்மாதம், 21ம் தேதி, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கின.நேற்று முன்தினம், முதற்கால யாகபூஜைகள் மற்றும் நவக்கிரக ஹோமமும், நேற்று, இரண்டு மற்றும் மூன்றாம் காலயாக பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து, இன்று நான்காம் கால யாக பூஜைகளுடன், காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணிக்குள், மூலவர் பொன்னியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகம் முடிந்து, அம்மன் வீதி உலா மற்றும் அன்ன தானம் நடைபெறும்.விழாவிற்கான பணிகளை, ஆலய நிர்வாக குழு தலைவர், நாகராஜ், செயலர், தேசிகாமணி, பொருளாளர், வில்வமூர்த்தி மற்றும் விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.