திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2021 12:02
சென்னை: சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டும் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பிரம்மோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்ற வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் உற்சவர் சந்திரசேகரர், திரிப்புரசுந்தரி தாயார் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடைபெற்றது. விழாவில் சிவ வாத்தியங்களை இசைத்தும், சங்கநாதம் முழங்கியும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.